ஊர் காரணம் :


திருக்கோவில் பற்றிய வரலாறு பின் வருமாறு :

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி வட்டம் கடையநல்லூர் நகரம் சொக்கம்பட்டி கிராமம் மேற்கு தொடர்ச்சி மலை அருகே கருப்பா நதி கரையில் நமக்கு எல்லாம் வேண்டும் வரம் தந்து அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு பெரியசாமி அய்யனார் திருக்கோயில்பாண்டிய நாட்டின் மன்னரின் ஒருவரான ஸ்ரீ வல்லப மகாராஜாஆட்சி காலத்தில் சொக்கம்பட்டி ஜாமீன் மேற் பார்வையில் அருள்மிகு பெரியசாமி அய்யனார் திருக்கோயில் 1200 வருடங்கள் முன்பு கட்டப்பட்டது .

ஜமிந்தரின் மேற்பார்வையில் இருந்த கோயில் ஆங்கிலேய அரசு வந்த பின் கோயில் நிர்வாகம் மாறியது. தற்போது இந்த கோயில் நிர்வாகம் தமிழக அரசின் இந்து சமய அறநிலை துறை என் கீழ் (HRNC) செயல் அலுவலரால் நிர்வகிக்கபட்டு வருகிறது.

ஆத்தடி கருப்பசாமி இருக்கும் கால்வாய் ஸ்ரீ வல்பன் கால்வாய் என்று பெயர்.தற்போதைய ஊரான கடையநல்லூர் அந்த காலத்தில் அர்ஜுனபுரி என்று அழைக்கப்பட்டு வந்தது.

கடையநல்லூரில் முதல் முதலாக தோன்றிய கோயில் அருள்மிகு பெரியசாமி அய்யனார் கோயில் தான்.அதற்கு பிறகு தான் மேல கடையநல்லூரில் உள்ள கடைகால் ஈஸ்வரன் கோயில் கட்டபட்டது.பக்தர் ஒருவர் சாமிக்கு பால் கொண்டு வரும்போது கால் இடறி தட்டியதால் கடையநல்லூர் என்ற பெயர் புழக்கத்தில் வந்தது.முலஸ்தானம் ,கருப்பசாமி, பரமாஈ ஆகிய தெய்வங்கள்க்கு உட்பூஜை அர்ச்கரும் பரிகார தெய்வங்களன பேட்சி , இருளப்பசாமி, குருகிட்டன் மற்றும் 21 பந்தி 64 சாமிகளுக்கும் வெளி போஜை அர்ச்கரும் பூஜை செய்து வருகிறார் .